விருச்சகம் - வார பலன்கள்
எதையும் திறம்படச் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்களுக்கு நன்மையும், தொல்லையும் கலந்த பலனாகவே நடைபெறும் வாரம் இது. ஞாயிறு பகல் 1.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழிலில் மிருந்த கவனம் தேவை. மனைவியின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, திருப்தியான வகையில் பணிகள் நடைபெறும். குடும்பத்தில் சிறு சிக்கல்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
மாணவர்களின் படிப்பாற்றல் பெற்றோருக்கு உற்சாகத்தைத் தரும். புதிய வாய்ப்புகளால், கலைஞர்கள் சுறுசுறுப்படைவார்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமையான போக்கு காணப்படும். பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். பாகப்பிரிவினை முடிவுக்கு வரும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட துன்பங்கள் மறையும்.