விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 12 Jan 2023 7:56 PM GMT (Updated: 12 Jan 2023 7:57 PM GMT)

சிந்தனையில் தெளிவுகொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

பணவரவுகள் சற்று தள்ளிப்போகும். உங்களின் கடின முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய பிரச்சினை ஒன்றை சுமுகமாகப் பேசி தீர்த்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முக்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். சொந்தத்தொழில் செய்பவர்கள், விரைவாகப் பணிகளை முடித்து வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பெறுவார்கள். கூட்டுத்தொழிலில் அதிக லாபம் வந்துசேரும். குடும்பத்தில் பணவரவு அதிகமாகும். பெண்கள், மங்கல நிகழ்வுகளில் கலந்து கொண்டு உற்சாகமடைவர். வேலைக்குப் போகும் ெபண்களுக்கு, அலுவலகம் மூலம் பணவரவு ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று, பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். வெளியூர் பயணத்தின் போது, உணவில் கட்டுப்பாடு அவசியம். பங்குச்சந்தையில் எதிா்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:- பெருமாளுக்கு புதன்கிழமை, துளசி மாலை சூட்டி வழிபட்டால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.


Next Story