விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Feb 2023 7:57 PM GMT (Updated: 16 Feb 2023 7:57 PM GMT)

திறமையான செயல்பாட்டால் வெற்றிபெறும் விருச்சிக ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் இடையூறு, தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எதிர்பாராத சில உதவிகளால் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நன்மைகள் பல நடைபெறக்கூடிய வாரம் இதுவாகும். இருப்பினும் புதிய தொழில் தொடங்குவது, வியாபாரத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களை தவிர்த்துவிடுங்கள். எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அதில் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடையக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் செலுத்துங்கள். இரவு நேரத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக் கல் - வாங்கலில் ஈடுபட்டுள்ளவர்கள், சில சிரமங்களை சந்திக்க வேண்டியது வரும். சிலருக்கு நண்பர்களின் வழியில் செலவு ஏற்படலாம். பிறர் பிரச்சினையில் தலையிடாதீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.


Next Story