விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 March 2023 1:26 AM IST (Updated: 24 March 2023 1:26 AM IST)
t-max-icont-min-icon

எதையும் நுணுக்கத்துடன் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய் காலை 7.29 மணி முதல் வியாழன் மாலை 6.18 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருந்து வரும். இருப்பினும் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வருவது அவசியம்.

தொழில் செய்பவர்களுக்கு தொழிலாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். என்றாலும் தொழில் வளர்ச்சி பாதிக்காது. கூட்டுத் தொழில், வியாபாரத்தில் சிவப்பு நிறப் பொருட்கள் நல்ல ஆதாயம் தரக்கூடும். கலைஞர்களுக்கு ஓரிரு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்கள் இயல்பாகவே கல்வியில் அக்கறை கொள்வர். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி வரும். பணவரவு பற்றாக்குறையாகவே இருக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, கிழக்கு நோக்கிய அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.


Next Story