விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 May 2023 1:39 AM IST (Updated: 5 May 2023 1:40 AM IST)
t-max-icont-min-icon

நினைத்ததை செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

செயல்களை முயற்சியுடன் செய்து எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். தளர்வடையும் காரியங்களைத் தக்க நபர்களின் மூலம் நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்குள்ள பொறுப்புகள் வந்துசேரும். நிறுத்தி வைத்த வேலையை உயரதிகாரியின் விருப்பத்தின் பேரில் செய்து முடிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளரின் அவசர வேலையைச் செய்து பாராட்டுப் பெறுவார்கள். புதிய நபர்களின் முக்கியமான வேலையினைப் பொறுப்புடன் செய்து கொடுப்பீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது பற்றி, பங்குதாரர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். குடும்பம் சீராக நடந்தாலும் சிறுசிறு தொல்லைகளும் தலைகாட்டலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களில் உற்சாகத்துடன் பணியாற்றுவர். பங்குச்சந்தையில் லாபம் குறையாது.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story