விருச்சகம் - வார பலன்கள்
கலை உணர்வு நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!
விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். எதிர்கால முன்னேற்றத்திற்காக நண்பர்களுடன் திட்டமிடுவீர்கள். இந்த வாரம் திங்கள் முதல் புதன் காலை 8.42 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மாறுதலான அனுபவங்களைப் பெறுவீர்கள். நிறுத்தி வைத்திருந்த வேலையொன்றை உயர் அதிகாரிகளின் கட்டளையால் விரைவாக செய்து முடிப்பீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று மகிழ்வர். கூட்டுத்தொழிலில் பணியாளர்களின் சுறுசுறுப்பால் வியாபார அபிவிருத்தி ஏற்படும். புதிய கிளைகளைத் தொடங்க கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது பிரச்சிைனகளை தடுக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை பராசக்தி அம்மனுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.