விருச்சகம் - வார பலன்கள்
தன்னம்பிக்கையோடு உழைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
ஞாயிறு முதல் செவ்வாய் மாலை 4.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வரவுகள் தாமதமாகும். அலைச்சலால் ஆரோக்கியக் குறை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் முயற்சியால் பதவி உயர்வு பெறக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை வந்துசேரும்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, முக்கியமான நபரின் அவசர வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையோடு புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் உறவினர் இல்லத்து நிகழ்வுகளில் கலந்துகொள்வர். கலைஞர்கள் பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். பணவரவும், புகழும் கூடும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.