ரிஷபம்- தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம்- தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 25 April 2022 9:50 AM GMT (Updated: 2022-04-25T15:32:14+05:30)

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் லாபாதிபதி குரு வீற்றிருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீன - சுக்ரன் சஞ்சாரம்

சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு மாதப் பிறப்புக்கு முன்தினம் பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். அசுர குரு, தேவ குரு சேர்க்கை ஏற்படுவதால், எதிர்பாராத விதத்தில் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும். மீன ராசி, சுக்ரனுக்கு உச்ச வீடாகும். எனவே ஆரோக்கியம் சீராகும். தங்கம், வெள்ளி சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் நல்ல பொறுப்புகளும் கிடைக்கும் நேரம் இது.

ரிஷப - புதன் சஞ்சாரம்

சித்திரை 15-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது மிகுந்த யோகம்தான். தனவரவு தாராளமாக வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

புதன் வக்ர இயக்கம்

சித்திரை 17-ந் தேதி, ரிஷபத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். தன -பஞ்சமாதிபதி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்த்துப் புனரமைப்பு செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மேஷ - புதன் சஞ்சாரம்

சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் பின்னோக்கி வருகிறார். அங்கு, உச்சம் பெற்ற சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். அவரோடு ராகுவும் இணைந்திருப்பதால், விரய ஸ்தானம் பலம்பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் சனி, குரு ஆகிய இரண்டு கிரகங்களும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றன. சூரியன், சுக்ரன் ஆகிய இரண்டு கிரகங்களும் உச்சம் பெற்றிருக்கிறார்கள். இப்படி நவக்கிரகங்களில் நான்கு கிரகங்கள் பலம்பெற்றிருக்கின்றன. எனவே மாதக் கடைசியில் எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்துசேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் புரிபவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

இம்மாதம் விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 21, 25, 28, 29, மே: 4, 5, 10, 11மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் தனாதிபதி புதன், விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். இருப்பினும் ஒருதொைக செலவானதும், அடுத்த தொகை வந்துசேரும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவை நனவாக்குவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். சில பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.


Next Story