ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 1:02 AM IST (Updated: 18 Aug 2023 1:03 AM IST)
t-max-icont-min-icon

தருமத்தில் விருப்பம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

பொருளாதார ரீதியாக பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அதிகச் செலவு ஏற்படும் என்பதால், திருப்தியான சூழ்நிலை இல்லாமல் போகலாம். உத்தியோகஸ்தர்களில் சிலர் அதிக வருமானமுள்ள புதிய வேலைக்குச் செல்ல முயற்சி மேற்கொள்வர். எதிர்பார்த்த கடன் உதவிகள் தள்ளிப் போகும். சொந்தத்தொழில் செய்பவர்களில் சிலருக்கு, புதிய வேலைகள் கிடைத்து பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். இதனால் ஓரளவு பணப் பற்றாக்குறை அகலும்.

கூட்டுத்தொழில் முயற்சியில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படலாம். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். பெண்களுக்கு பொருள் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனமாக செயல்படுங்கள். கலைஞர்களுக்கு, தொழிலில் எதிா்பார்க்கும் வருமானம் இருக்காது.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டுங்கள்.

1 More update

Next Story