ரிஷபம் - வார பலன்கள்
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை காலை 8.19 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எவ்வளவு வரவு இருந்தாலும் செலவழிந்தபடியே இருக்கும். சொல்லில் இனிமை சேர்த்துக் கொண்டால் நடப்பவை நல்லவையாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். அவசியமான பணிகள் அவசரத்தை ஏற்படுத்தும்.
சொந்தத்தொழில் செய்பவர்கள் சோர்வின்றி பணியாற்றி ஆதாயத்தை அதிகரித்துக் கொள்வர். புதிய வாடிக்கையாளர் வருகை தொழிலை மேம்படுத்தும். கூட்டுத் தொழிலில் லாபம் பெருகும். புதிய தொழில் தொடங்குவது பற்றி கூட்டாளிகளுடன் கலந்தாலோசிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமும், சிறுசிறு தொல்லைகளும் இடம்பெறும். பிள்ளைகளின் வேலை பற்றி நற்செய்தி வரும். கலைஞர்கள், தங்கள் பணியில் மும்முரம் காட்டுவர். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.