ரிஷபம் - வார பலன்கள்
காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!
சிறிய இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பண வரவு தாமதமானாலும், பக்குவமாகக் கையாளுவீர்கள். மேற்கில் இருந்து வரும் மேலான செய்தி மகிழ்வு தந்து மனதைக் கவரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின் அன்பான ஆதரவு இருந்தாலும் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்காது. சொந்தத்தொழில் சுமாரான லாபம் தரும் சூழ்நிலையில் இருக்கும். வேலை தந்த வாடிக்கையாளர்களுக்கு தேவையானபோது வேலைகளை முடித்துத் தர கூடுதல் நேரத்தை செலவு செய்ய வேண்டியது இருக்கும். ஊதியம் பெற்றாலும், உற்சாகம் குறைவாகும். கூட்டுத் தொழிலில் குறைவான லாபம் வந்தாலும் பணிகள் தடையின்றி நடைபெற்று வரும். குடும்பம் அமைதியாக காட்சி தரும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று முன்னேறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு சிவந்த மலர் மாலை சூட்டுங்கள்.