ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:49 PM GMT (Updated: 14 Sep 2023 7:49 PM GMT)

கலை உணர்வு மிகுந்த ரிஷப ராசி அன்பர்களே!

செயல்கள் சிலவற்றில் வெற்றி பெற்றாலும், மற்றவைகளில் ஏற்படும் பின்னடைவுகளைத் தீவிர முயற்சியுடன் சரி செய்து முன்னேற பாடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலருக்குத் தொழில் ரீதியான வெளியூர் பயணம் ஏற்படக்கூடும். சகப் பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர்.

சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். பணியில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பீர்கள். உதவியாளர்களின் பணி திருப்தியாக இருக்காது. கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளுடன் வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளைப் பற்றி ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கலைஞர்கள் உற்சாகத்தோடு பணிகளில் கவனம் செலுத்துவார்கள். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெற்று லாபகரமாக இருக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.


Next Story