ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 Sep 2023 7:58 PM GMT (Updated: 21 Sep 2023 7:59 PM GMT)

கலையழகுடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை பகல் 12.41 மணி முதல் ஞாயிறு மாலை 4.17 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கூடுமானவரை எதிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். தேவையில்லாத விஷயங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு அலுவலகத்தில் செல்வாக்குடன் கூடிய பொறுப்புகள் வந்து சேரலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அவசர வேலை ஒன்றை செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். புதிய நபர் மூலம் பணவரவுகளும், புகழ் தரும் வேலைகளும் கிடைக்கும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்ய பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கலைஞர்களில் சிலருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் சூட்டுங்கள்.


Next Story