ரிஷபம் - வார பலன்கள்
29.9.2023 முதல் 5.10.2023 வரை
அரிதான செயலைச் செய்யும் ரிஷப ராசி அன்பர்களே!
முயற்சிகள் பலவற்றில் வெற்றியடைவீர்கள். எதிர்பார்க்கும் வரவுகள் சிறிது தாமதித்து வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகம் பற்றி வெளி நபரிடம் பேசுவது வீண் பிரச்சினையை ஏற்படுத்தலாம். சகப் பணியாளர் ஒருவரின் பணியை சேர்த்து செய்ய வேண்டிய நிலை உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பணிகளில் ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்து கொடுப்பதற்காக ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். வாடிக்கையாளர் ஒருவரால் புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தொழில் அபிவிருத்தி பற்றி பங்குதாரர்களிடம் ஆலோசிப்பீர்கள். எதிர்பார்க்கும் லாபம் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு கடன் பிரச்சினைகள் தோன்றும். அவற்றால் பாதிப்பு வராமல் சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள், பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு மலர் மாலை சூட்டுங்கள்.