ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 Oct 2023 7:27 PM GMT (Updated: 5 Oct 2023 7:28 PM GMT)

6.10.2023 முதல் 12.10.2023 வரை

தலைமை பொறுப்புக்கு தகுதியான ரிஷப ராசி அன்பர்களே!

நன்மையும் தொல்லையும் கலந்த பலன்களாகவே நடந்து வரும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாமன், மைத்துனர் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் அலைச்சல் இருந்தாலும், அதற்கேற்ற முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக இருந்தாலும் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். காரியங்கள் நடைபெற சிறிது பொறுமை தேவைப்படும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணியாளர்களிடம் சுமுகமாக நடந்து, வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நேரலாம். கூட்டுத் தொழிலில் வியாபாரம் நன்றாக இருந்தாலும் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை தலைதூக்கும். பழைய கடன்கள் தொல்லையளித்தாலும் பாதிப்பு வராது. கலைஞர்கள் பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை அம்பாள் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story