ரிஷபம் - வார பலன்கள்
13-10-2023 முதல் 19-10-2023 வரை
தோல்வியைக் கண்டு துவளாத ரிஷப ராசி அன்பர்களே!
உற்சாகத்தோடும், முயற்சியோடும் பல செயல்களில் முன்னேறிச் செல்வீர்கள். ஆனால் சில காரியங்கள் மட்டுமே நீங்கள் நினைத்தபடி கைகூடி வரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். அலுவலகம் பற்றி யாரிடமும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபர்களிடம் இருந்து ஒப்பந்தங் களைப் பெறக்கூடும். முன்னர் செய்து கொடுத்த வேலையில் உள்ள சிறிய குறைபாட்டினை சரிசெய்து கொடுப்பீர்கள். கூட்டு வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. போட்டியாளர்களைச் சமாளிப்பது பற்றி கூட்டாளிகளுடன் விவாதித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். கலைஞர்கள், சகக் கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டுங்கள்.