ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 19 Oct 2023 7:30 PM GMT (Updated: 19 Oct 2023 7:31 PM GMT)

20-10-2023 முதல் 26-10-2023 வரை

கலைநுணுக்கம் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே!

தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். அதே நேரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். பணவரவு தள்ளிப் போகும். வரும் பிரச்சினைகளை பொறுமையாக கையாண்டு சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். சொந்தத் தொழில் லாபம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் உண்டு. கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறும். பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை. பாக்கிகளை வசூலிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். சுபகாரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் உற்சாகம் காட்டுவர். பங்குச்சந்தை லாபம் தரும்.

சிறப்புப் பரிகாரம்:-இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.


Next Story