ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 26 Oct 2023 7:58 PM GMT (Updated: 26 Oct 2023 7:59 PM GMT)

27-10-2023 முதல் 2-11-2023 வரை

நம்பிக்கையோடு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

நம்பிக்கையானவர்களின் துணையோடு செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சில காரியங்களில் வெற்றியும், வேறு சில செயல்களில் தேக்கமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு எதிர்பாராத முறையில் உயர் அதிகாரியால் பாதிப்பும், வெளியூர் இடமாற்றமும் நேரலாம். பணப் பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை வரும். செய்து கொடுத்த பணியொன்றை மீண்டும் செய்ய வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தாமதமாகும். முக்கியமான கருவியில் பழுது ஏற்பட்டு பணிகளை முடிக்க இயலாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புக்காக வெளியூர் பயணிப்பார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story