ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 Oct 2022 1:23 AM IST (Updated: 21 Oct 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை, 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்கள்

நிர்வாகத் திறமை மிகுந்த ரிஷப ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். உதவியாளர் பணி திருப்தியாக இருக்காது. கூட்டுத்தொழில் செய்பவர்கள், வியா பாரத்தில் கவனமாக இல்லாவிட்டால், போட்டியாளர்களின் கை ஓங்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் ஏற்பட சிறிது காலம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது. சகக்கலைஞர்களிடம் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். பழைய பணிகளில் எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைக்கலாம். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் சிறு தடைக்குப்பின் நடந்தேறும்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வது செல்வமும், புகழும் தரும்.


Next Story