ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 Oct 2022 1:26 AM IST (Updated: 28 Oct 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்கள்

எழுத்துக் கலையில் சிறந்து விளங்கும் ரிஷப ராசி அன்பர்களே!

சனிக்கிழமை பகல் 12 மணி முதல் திங்கட்கிழமை பகல் 2.27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. பண வரவு தள்ளிப்போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்கள் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்தாவிட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். சிறிய குறை கூட உயர் அதிகாரிகளால் பெரிதாக பார்க்கப்படும். சொந்தத்தொழிலில் புதிய ஒப்பந்தங்களால் வேலைப்பளு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தம் பெற தீவிர முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் கடன் தொல்லைகள் இருக்கும். வருமானம் போதிய அளவு இருக்காது. பெண்களின் சேமிப்பு தக்க நேரத்தில் கைகொடுக்கும்.

பரிகாரம்:- பார்வதி தேவிக்கு திங்கட்கிழமை அன்று, வெண் மலர் மாலை சூட்டி வழிபட்டால் சகல நலனும் வந்துசேரும்.


Next Story