ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Nov 2022 1:20 AM IST (Updated: 4 Nov 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களில் முயற்சியுடன் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் அதிக முயற்சியுடன் ஈடுபடும்போது முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் தங்கள் வேலையை விட்டு விட்டு அதிக ஆதாயமுள்ள வேலைக்குச் செல்ல முயற்சி செய்வார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், செய்து கொடுத்த பணியில் உள்ள குறைகளை மீண்டும் சரி செய்து கொடுக்க நேரலாம். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பார்க்கும் லாபத்தில் குறையிருக்காது. கூட்டாளிகளில் ஒருவர் பிரிந்து சென்று, புதிய தொழிலைத் தனியாகச் செய்ய முற்படுவார். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் பணியாற்றுவார்கள். திருப்தியான வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். பெண்களுக்கு அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்கலாம்.

பரிகாரம்:- சுதர்சனப் பெருமாளுக்கு புதன்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் அல்லல்கள் தீரும்.


Next Story