ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
தினத்தந்தி 18 Nov 2022 12:52 AM IST (Updated: 18 Nov 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

நிர்வாகத் திறமை மிகுந்த ரிஷப ராசி அன்பர்களே!

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் நல்ல முடிவை எட்டுவீர்கள். அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் உள்ளவர்கள், இதுவரை தங்களுக்கு இருந்து வந்த தொல்லைகளும், வழக்குகளும் விலகுவது கண்டு மகிழ்ச்சியடைவர். கடுமையான பிரச்சினைகள் கூட கலகலப்பாக மாறிவிடும். வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள், உத்தியோகத்தில் சிறந்து விளங்குவதுடன், தனவரவுகளை அடையவும் வழிபிறக்கும். கணிப்பொறி மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு தொழில் செய்பவர்கள், பணத்தட்டுப்பாடு உண்டாவதைத் தவிர்க்க முடியாது. தொழில் விரிவாக்கம் செய்ய நினைப்பவர்கள், ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். பழைய வாகனங்களை மாற்றவும், புதிய வாகனங்கள் வாங்கவும் நேரம் கனிந்து வருகிறது. மாணவர்களுக்குத் தடைப்பட்ட கல்வி தொடரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள சூரியனுக்கு, நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.


Next Story