ரிஷபம் - வார பலன்கள்
முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை காலை 8.09 மணி முதல் ஞாயிறு வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல்-வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றிபெறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, இதுவரை இருந்த மனக்குழப்பம் மறையும். ஒரு சிலர் வீடு வாங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. கூட்டுத் தொழில் செய்பவர்கள், எந்த காரியத்தையும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து செய்வது நல்லது. அரசியலில் இருப்பவர்கள் வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால், புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆன்மிகப் பயணங்கள் செய்யும் வாய்ப்பு தேடி வரும். பயணத்தின் போது, உணவில் கட்டுப்பாடு அவசியம். தள்ளிப்போன திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றினால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.