ரிஷபம் - வார பலன்கள்
வெற்றிக்காக விரும்பும் செயல்களில் முன் நிற்கும் ரிஷப ராசி அன்பர்களே!
எதிர்பார்க்கும் எண்ணங்களை செயல் வடிவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தள்ளி வைத்த காரியம் ஒன்று தானாகவே முடியக்கூடிய நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை சிலர் அடைவீர்கள். புதிய நபர் வருகையால் அவசர காரியம் ஒன்றை செய்ய வேண்டியதிருக்கலாம். சுயதொழிலில் உற்சாகம் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வரவினால் எதிர்பாராத வளர்ச்சியும், பணவரவும் மகிழ்வளிக்கும். கூட்டுத்தொழிலில் திடீர் போட்டிகள் உருவாகி, வியாபாரத்தை பாதிக்கலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சமாளிக்கப்படும். சுபகாரியங்கள் நடைபெற முயற்சி மேற்கொள்வீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொண்டு வரக்கூடும். அன்றாட நிலவரங்களை கவனிப்பது பலன் அளிக்கும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை அங்காரக பகவானுக்கு தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.