ரிஷபம் - வார பலன்கள்
தேர்ந்த அறிவாற்றல் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே!
கெடுபலன்கள் குறைவாகவும், நற்பலன்கள் அதிகமாகவும் ஏற்படும் வாரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
தொழில் செய்பவர்கள் படிப்படியாக வளர்ச்சி பெறுவதோடு, திருப்தியான பண வருவாயையும் பெறுவீர்கள். வியாபாரம் ஓரளவு மும்முரமாக நடைபெறுவதைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். எனினும் பணப்புழக்கம், கணக்கு வழக்குகளில் எச்சரிக்கை தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும்.
மாணவர்களின் சுறுசுறுப்பான போக்கு பெற்றோரிடம் நற்பெயரைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கனிவும் அன்பும் கலந்து காணப்படும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும்.