ரிஷபம் - வார பலன்கள்
உறுதி படைத்த உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
சிறுசிறு தடங்கல்கள் இருந்தாலும், உங்கள் சாமர்த்தியத்தால் அதனை வென்று விடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாறுதலும் வந்துசேரலாம். சொந்தத்தொழில், நல்ல வருமானம் தருவதாக அமையும். அவசரப்பணிகளில் ஓய்வின்றி ஈடுபடு வீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபார முன்னேற்றம் குறித்து கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் ஓரளவு லாபம் தரும். பழைய பங்குகளை விற்பதில் அவசரம் வேண்டாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று, பணிகளில் மகிழ்ச்சியாக ஈடுபடுவர். வருமானமும், புகழும் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கும். பெண்கள் திறமையால் பழைய பகை மறையும்.
பரிகாரம்:- விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் நன்மைகள் வந்துசேரும்.