ரிஷபம் - வார பலன்கள்
தர்மம் செய்வதில் விருப்பம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
வியாழன் பகல் 12.32 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க நேரிடும். என்றாலும் காரியங்களில் வெற்றிபெற கடுமையாக உழைப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உயரதிகாரியின் விருப்பப்படி, முக்கிய காரியம் ஒன்றை உடனே செய்து கொடுக்க வேண்டியது இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், முன்னேற்றத்துக்குத் தேவையான பணிகளில் கவனம் செலுத்தலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களின் ஆலோசனைப்படி முதலீடுகளை அதிகமாக்க முற்படுவார்கள். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களே அவற்றை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள் தங்கள் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவர். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்:- வியாழக்கிழமை நவக்கிரகங்களுக்கு நெய் தீபமிட்டு வழிபடுவதால் தடைகள் நீங்கும்.