ரிஷபம் - வார பலன்கள்
ஆன்மிகப் பற்று அதிகமுள்ள ரிஷப ராசி அன்பர்களே!
செயல்களில் முயற்சியுடன் ஈடுபட்டாலும், சில காரியங்களிலேயே வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைத்தாலும் தாமதங்களைத் தவிர்க்க இயலாது. உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகப் பணி காரணமாக, வெளியூர் செல்ல நேரிடும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர் மூலம், புதிய நபரின் அறிமுகம் ஏற்படலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் மூலப் பொருட்களின் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாக நடந்து கொண்டால் பல பிரச்சினைகளைச் சமாளிக்க இயலும். வாகனங்களை பராமரிப்பது அவசியம். பெண்களுக்கு தாய் வழி சொந்தங்களால் சில ஆதாயம் ஏற்படும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், புதிய ஒப்பந்தங்களில் ஆர்வத்துடன் பணியாற்றுவார்கள். பங்குச்சந்தை லாபம் தரும்.
பரிகாரம்:- வியாழக்கிழமை பெருமாளுக்கு, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு நன்மைகள் விளையும்.