ரிஷபம் - வார பலன்கள்
எதிலும் யோசித்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள் சிலர், உயரதிகாரிகளின் ஆதரவால் சிறு சலுகைகளைப் பெறுவார்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருந்தாலும், அதற்கான வருமானம் மகிழ்ச்சியைத் தரும். நவீனக் கருவிகளின் மூலம் விரைவாக வேலைகளைச் செய்து கொடுத்து பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான லாபம் குறையாது. புதிய கிளை தொடங்க கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி மகிழ்ச்சிப்படுத்தும். சகக் கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும், சிறு சிறு பிரச்சினைகளும் உண்டாகலாம்.
வழிபாடு:- சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் துன்பங்கள் விலகும்.