ரிஷபம் - வார பலன்கள்
சாஸ்திரங்களில் ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு. சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டாலும், செலவுகளை தடுக்க முடியாது. எதிர்பார்த்த காரியங்கள், எதிர்பார்த்தபடி நடைபெறுமா? என்பது சந்தேகம்தான். உங்களுக்கு உதவுவதாக சொன்னவர் கடைசி நேரத்தில் கைவிரிப்பதால் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். எனவே எதையும் திட்டமிடுதல் அவசியம்.
செய்யும் தொழிலில் தேவையற்ற பிரச்சினைகள், தொழில் போட்டிகள் போன்ற குறுக்கீடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தாலும் திறமை உங்களை கைவிடாது. பிரச்சினைகள் குறைந்தாலும் பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிறுசிறு குழப்பங்கள் விலகும். எல்லோரையும் அரவணைத்துச் செல்பவர்களுக்கு பிரச்சினைகள் குறைவாகத் தெரியும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை அன்று குரு பகவானை வழிபட்டால், மங்கலகரமான வாழ்க்கை அமையும்.