ரிஷபம் - வார பலன்கள்
தீரமும், உறுதியும் மிகுந்த ரிஷப ராசி அன்பர்களே!
முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு முன்னேற்றம் காணும் வாரம் இது. வரவுகளில் தாமதம் உண்டாகும். உறவினரும், நண்பர்களும் தக்க நேரத்தில் உதவுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் அலட்சியமாக இருந்தால் பிரச்சினை வந்து சேரும். உத்தியோகம் செய்வோர், உயர் அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில், தள்ளிவைத்த வேலையை செய்ய நேரிடும். பணியில் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். சொந்தத் தொழில் செய்வோருக்கு, வாடிக்கையாளரின் பாராட்டு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் சிறிது லாபம் கூடும். பணியாளர்கள் பணிகளில் ஊக்கமுடன் உழைக்க அறிவுரை கூறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்கும். நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். கலைஞர்களுக்கு தீவிர முயற்சியால் புதிய பணி கிடைத்திடும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் குறையலாம்.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானுக்கு, நெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள்.