ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 March 2023 8:01 PM GMT (Updated: 9 March 2023 8:02 PM GMT)

தளராத முயற்சி கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

புதன் மற்றும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், மறைமுக தொல்லைகள் ஏற்படும். பொருளாதார விஷயத்தில் சற்று கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை, சக ஊழியர்களின் தலையீடு காரணமாக தடங்கலைச் சந்திக்கலாம். தொழில் செய்பவர்கள், தங்களது துறையில் ஓரளவுக்கு முன்னேற்றத்தைக் காண முடியும். அரசு வழியில் சில உதவிகளும் கிடைக்கக்கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் திருப்தியடையும் வகையில், வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். கலைஞர்கள், பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு, சிறிது காலம் பொறுமையாக இருங்கள். குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்டாலும், அது உடனடியாக மறையும்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


Next Story