ரிஷபம் - வார பலன்கள்
சிந்தனைச் செறிவு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
சில காரியங்கள் வெற்றி பெற அதிக முயற்சிகள் தேவைப்படக்கூடும். முக்கிய நண்பர் உங்கள் பணிகளுக்கு உதவியாக இருப்பார். பணவரவு திட்டமிட்டபடி வந்தாலும், செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கோடு கூடிய புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய பணிகளில் ஓய்வில்லாமல் ஈடுபட்டு விரைவாகச் செய்து முடிப்பார்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். பணப் பொறுப்பில் உள்ள பணியாளர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கவனிக்காவிட்டால், பெரிய பிரச்சினையாக வளர்ந்து நிற்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருந்தாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பெண்களில் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு அகலும். உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவப் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.