ரிஷபம் - வார பலன்கள்
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
ஒவ்வொரு காரியத்திலும் அதிக முயற்சியை காட்டுவீர்கள். ஆனால் திங்கட்கிழமை இரவு 8.29 மணி முதல் புதன் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிலவற்றில் மட்டுமே வெற்றிகரமான பலன் கிடைக்கும். தக்க நபர்களின் ஆதரவுடன் தளர்வான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட பணவரவு, தாமதமாகவே வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் உயரதிகாரிகளின் கோபப் பார்வையை சந்திக்க நேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகமாகும். ஆதாயம் பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. கூட்டுத்தொழில் வியாபாரத்தில், போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் கடனை சமாளிக்க நண்பர்களின் உதவி தேவைப்படும். கலைஞர்கள் புதிய வாய்ப்பு பெற்றாலும், வருமானம் போதுமானதாக இருக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை ஹயக்ரீவருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுங்கள்.