ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 11 May 2023 7:51 PM GMT (Updated: 11 May 2023 7:52 PM GMT)

ஆன்மிக செயல்களில் அதிக ஈடுபாடு காட்டும் ரிஷப ராசி அன்பர்களே!

முயற்சிகள் சிலவற்றில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சில செயல்கள் வெற்றியடையாமல் பாதியில் நிற்கலாம். அதிக முயற்சிகளோடு அவற்றில் வெற்றிபெற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு விருப்ப ஓய்வு கிடைக்கலாம். உயரதிகாரிகளிடம், பொறுமையாக நடந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் பழைய வாடிக்கையாளர் மூலம் அதிக வேலைகளைப் பெறக்கூடும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் சிலருக்கு வசிக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். பெண்கள் தாய்வீடு சென்று மங்கலப் பொருட்களுடன் திரும்புவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை லட்சுமி ஹயக்ரீவருக்கு துளசிமாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story