ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 26 May 2023 1:33 AM IST (Updated: 26 May 2023 1:33 AM IST)
t-max-icont-min-icon

சிறந்த ஆன்மிகப் பற்று கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

முன்னேற்றமான பலன்களை அடைவதற்கு, செய்யும் செயல்களில் அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில காரியங்களில் வெற்றிபெற சிறிது தாமதமாகக் கூடும். தன வரவுகள் திட்டமிட்டபடி கிடைத்தாலும் செலவினங்கள் எதிர்பாராதவாறு வந்துசேரும். எதிர்பார்த்த முக்கிய தகவல் கிடைத்து மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் விருப்பப்படி அவசியமான வேலையை விரைவாகச் செய்து கொடுத்துப் பாராட்டுப் பெறுவீர்கள்.

சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி பணியாற்றினாலும், குறித்த காலத்தில் பணியை முடித்துக் கொடுக்க முடியாமல் போகலாம். கூட்டுத் தொழிலில் லாபம் பெறுவதில் சிரமம் இருக்காது. பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை ஹயக்ரீவருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.


Next Story