ரிஷபம் - வார பலன்கள்
தர்மம் செய்வதில் ஆர்வம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
திங்கள் முதல் புதன் காலை 7.40 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் முழுமையான அனுகூலத்தை எதிர்பார்க்க முடியாது. பணவரவு சற்று தாமதமாகும். செலவும் வழக்கம் போல் இருக்கும். தொழிலில் சங்கடம் ஏற்பட்டாலும், முடிவில் நன்மை உண்டாகும். தற்போது யோக திசை நடப்பவர்களுக்கு பதவி உயர்வு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்க்கலாம். பெண்கள் குடும்பத்தில் புகழ் அடைவார்கள். பூமி சம்பந்தமான விஷயங்களை தற்போது ஒதுக்கி வைப்பது நலம் பயக்கும். ஒதுங்கி இருந்த உறவு தேடி வரும். நண்பர்கள் வழியில் சில அனுகூலமான விஷயங்கள் நடைபெறும். பயணங்களில் இருந்த தடை விலகும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவெடுங்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் போதிய வருமானம் இருக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.