ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Jun 2023 1:21 AM IST (Updated: 9 Jun 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

எல்லோருடனும் நட்பு பாராட்டும் ரிஷப ராசி அன்பர்களே!

சிறுசிறு தாமதங்கள் உண்டானாலும், உங்கள் செயல்களில் எதிர்பார்க்கும் வெற்றிக்கு குறைவிருக்காது. சில அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்ற முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு தெம்பளிக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது, பல சிக்கல்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

சொந்தத் தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் திறமையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். மூலப் பொருட்களை இருப்பு வைத்திருப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும். கடன் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக இயங்குவர்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ இலையால் அர்ச்சித்து வழிபாடு செய்து வாருங்கள்.


Next Story