ரிஷபம் - வார பலன்கள்
எந்த செயலையும் எளிதாகச் செய்யும் ரிஷப ராசி அன்பர்களே!
நீங்கள் ஈடுபடும் காரியங்கள் பலவற்றில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். திட்டமிட்ட பணவரவுகள் சரியான நேரத்தில் கைக்குக் கிடைக்கும். சகோதரர்களிடம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும்.
சொந்தத் தொழில் செய்பவருக்கு, புதிய வாடிக்கையாளர் மூலமாக பணி கிடைத்து, அதில் வருமானமும் ஈட்டுவார்கள். வேலைகளில் நெருக்கடி நிறைந்திருக்கும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக்கூடும். போட்டிகள் அதிகமாகலாம். குடும்பத்தில் சீரானப் போக்கு காணப்படும். கலைஞர்கள் பிரபல நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்று மகிழ்வா். பங்குச்சந்தை வியாபாரம் அதிக லாபம் தரக்கூடும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டுங்கள்.