இன்றைய ராசிபலன் (06.12.2025): பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
டிசம்பர் 6
கிழமை சனிக் கிழமை
தமிழ் வருடம் விசுவாவசு
தமிழ் மாதம் கார்த்திகை
நாள் 20
ஆங்கில தேதி 6
மாதம் டிசம்பர்
வருடம் 2025
நட்சத்திரம் இன்று இரவு 10-14 வரை பூசம் பின்பு ஆயில்யம்.
திதி இன்று அதிகாலை 04-42 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம் சித்த,மரண யோகம்
நல்ல நேரம் காலை 10-45 to 11-45 - மாலை 4-45 to 5-45
ராகு காலம் காலை 9-00 to 10-30
எமகண்டம் மாலை 1-30 to 3-00
குளிகை காலை 6-00 to 7-30
கௌரி நல்ல நேரம் காலை 12-15 to 1-15 - மாலை 9-30 to 10-30
சூலம் கிழக்கு
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன்
மேஷம்
தொழில் நிமித்தமாக வெளிநாட்டு பயணம் செல்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் விலகும்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
ரிஷபம்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெளிநாட்டில் தங்கள் தொழிலை பரப்புவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். மாணவ மணிகளுக்கு வண்டி வாகனத்தில் பயணம் செய்யும்போது மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
மிதுனம்
குடும்பத் தலைவிகளுக்கு பணவரவில் பஞ்சமில்லை. வெளிநாடு சென்று இருந்த தங்கள் பிள்ளை தாய் நாட்டிற்கு வந்து உங்களை பார்க்க திட்டமிடுவார். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் கிரே
கடகம்
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். குடும்ப தலைவிகளுக்கு டெபாசிட் செய்து நிரந்தர பண வருவாய்க்கு வழிவகை செய்வீர்கள். தம்பதியினர் வெளியே சொல்லாத வண்ணம் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்
சிம்மம்
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள். நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். நீரிழிவு நோயாளிகள் இனிப்பு வகை பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் கருநீலம்
கன்னி
குடும்பத் தலைவிகளுக்கு நகை சீட்டில் பணம் போட துவங்குவர். மாமியார் வீடு தங்களுக்கு சப்போட்டாக இருக்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். உயர்கல்வியில் வெற்றி உண்டு.உடலில் மாதவிடாய் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
துலாம்
பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையிலும் சாதனை புரிவர்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
தனுசு
இளம் பெண்களுக்கு தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். கூடுதல் அறை கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பாதுகாப்பது நலம். தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
மகரம்
பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். தங்கள் வழக்கு சாதகமாகும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவ மணிகளுக்கு தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
கும்பம்
நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு வெளியே வாங்கிய கடன் பாக்கி தீர்ந்துவிடும். வீட்டிற்கு நண்பர்கள் வந்து போவர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
மீனம்
உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். அக்கம் பக்கத்து வீட்டார் உதவிகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் பச்சை






