இன்றைய ராசிபலன் (14.01.2026): நண்பர்கள் கை கொடுப்பர்...!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
Today Rasi Palan in Tamil - 14.01.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

ஜனவரி 14

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: மார்கழி

நாள்: 30

ஆங்கில தேதி: 14

மாதம்: ஜனவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று அதிகாலை 2-20 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி: இன்று மாலை 07-43 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9-30 - 10-30

நல்ல நேரம் மாலை: 4-30 - 5-30

ராகு காலம் மாலை: 12-00 - 1-30

எமகண்டம் காலை: 7-30 - 9-00

குளிகை காலை: 10-30 - 12-00

கௌரி நல்ல நேரம் காலை: 10-30 - 11-30

கௌரி நல்ல நேரம் மாலை: 6-30 - 7-30

சூலம் வடக்கு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடன் பைசலாகும். பிள்ளைகள் நன்கு படிப்பர். வெளியாட்களிடம் முக்கிய விஷயங்களை பகிர வேண்டாம். தந்தையார் தங்களுக்கு உறுதுணையாக இருப்பார். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். பணவரவு கூடும். நினைத்த நபரை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விற்பனை கூட்ட சலுகைகளை தருவீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மாணவர்கள் பாராட்டப்படுவர். பூர்வீக சொத்தால் பயன் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை

யோகாவில் மனம் லயிக்கும். வழக்கில் திருப்பம் காணலாம். சகோதரிக்கு திருமணம் செட்டாகும். பண வரவில் பற்றாக்குறை இருக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். நல்ல வரண் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். பொது தொண்டில் புகழ் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். பிள்ளை நன்கு படிப்பர். பெரியவர்களுக்கு மருத்துவ செலவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

வழக்கு சாதகமாக முடியும். தேவைக்கேற்ப பணம் வரும். மருத்துவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும். திருமணப் பேச்சு வார்த்தையைத் துவங்குவீர்கள்.உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சகோதரவழியில் பிரச்சினை வரும்.விட்டுக் கொடுங்கள் அவர்கள் உங்களை புரிந்து கொள்வர். புது நிலம், வீடு வாங்குவீர்கள்.வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சங்கடம் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைக் கொடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தம்பதிகள் சேமிப்பினை கூட்டுவர். பணவரவில் சிக்கல் இல்லை. வாடிக்கையாளர்களிடம் வாய்நிதானம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவர். மூன்றாமவரை குடும்ப விசயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உடல் நலம் சீராகும்.கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தம்பதிகள் புரிந்து கொள்வர். பங்கு சந்தையால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிடுவர். வழக்கு சாதகமாகும். பயணத்தால் பயன் உண்டு. பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். அரசு காரியங்கள் முடியும். புதிய கிளைகளை துவங்குவர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அரசியலில் நாட்டம் கூடும். உறவினர்கள் வந்து போவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

வெளியிடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டி தொடரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நண்பர்களின் ஆதரவுப் பெருகும். காதல் கசக்கும். பெரியவர்கள் தங்களுக்கு நல்ல வரணை அமைப்பர். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

பழைய பாக்கி கைக்கு வரும். நல்லவர் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். மனையில் இருந்த சிக்கல் விலகும். கணினித் துறையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com