கன்னி - வார பலன்கள்
07-07-2023 முதல் 13-7-2023 வரை
முன்னேறும் ஆர்வம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களும் சந்திராஷ்டமம் உள்ளதால், பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள், அவசரப்பட்டு செய்த வேலை ஒன்றில் பிரச்சினையை சந்திக்க நேரலாம். சக நண்பர்களிடத்தில் குடும்ப விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் ஒருவரின் முக்கிய வேலை ஒன்றை விரைவாகச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபார அபிவிருத்தி ஏற்படும். பணப்பொறுப்பில் உள்ளவர்களை அடிக்கடி கண்காணிக்காவிட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லை இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்பினைப் பெற தீவிரமாக முயற்சிப்பார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.