கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2023 1:07 AM IST (Updated: 28 July 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

கற்பனைமிகு எழுத்தாற்றல் நிறைந்த கன்னி ராசி அன்பர்களே!

எடுத்த முயற்சிகளில் முன்னேற்றம் கண்டாலும், கவனமுடன் செயலாற்றுவது நல்லது. மற்றவர்களால் செய்ய முடியாத காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் செயலில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. அலுவலகப் பதிவேடுகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்வது முக்கியம். பணியாளர்கள், நல்ல முறையில் ஒத்துழைப்பார்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் காரியங்களை செய்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். பண விஷயங்களில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து விடுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை சற்று சிரமத்தின் பேரில்தான் பெற வேண்டியதிருக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சிவனுக்கு தும்பை மலர் மாலை சூட்டி வணங்குங்கள்.


Next Story