கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:42 AM IST (Updated: 4 Aug 2023 12:48 AM IST)
t-max-icont-min-icon

4.8.2023 முதல் 10.8.2023 வரை

முன்னேறத் துடிக்கும் உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

திங்கள் காலை 8.29 மணி முதல் புதன்கிழமை பகல் 1.36 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், காரியங்களில் தடை ஏற்படக்கூடும். அதிக முயற்சிகளை மேற்கொண்டாலும் ஒரு சில காரியங்களில்தான் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவிகளைப் பெற முற்படுவீர்கள். பிரியமானவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு அகலும்.

உத்தியோகத்தில் வழக்கத்திற்கு மாறாக, வேலைப் பளுவால் அவதிப்படுவீர்கள். பணியாளர்களுடன் சுமுகமாக நடந்துகொள்வது நல்லது. சொந்தத்தொழிலில் அதிக வேலை இருந்தாலும், வருமானம் போதுமானதாக இருக்காது. மூலப் பொருட்கள் பற்றாக்குறையால் தொழிலில் முன்னேற்றம் தடைபடும். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் ஏற்படலாம். கலைஞர்கள், பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கினாலும், எதிர்பார்க்கும் வருமானம் இல்லாமல் போகலாம்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு மலர் மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story