கன்னி - வார பலன்கள்
உழைப்புக்கு அஞ்சாத கன்னி ராசி அன்பர்களே!
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான பலன்களைப் பெற்று முன்னேற்றமடைவீர்கள். வரவேண்டிய தன வரவுகள் தாமதமில்லாமல் வந்து சேரும். இடமாற்ற முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். செய்யும் வேலையில் பாராட்டும் ஆதாயமும் ஏற்படலாம். சொந்தத்தொழிலில் எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்கு நடைபெறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு மூலதனத்தை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான போக்கு காணப்படும். பெண்களும் தங்கள் பிள்ளைகளுடன் உறவினர் வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்று மகிழ்வர். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஓய்வில்லாமல் பணிகளில் ஈடுபடுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி