கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
தினத்தந்தி 2 March 2023 8:04 PM GMT (Updated: 2 March 2023 8:06 PM GMT)

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

வெற்றியை மட்டுமே விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

எண்ணங்களை செயல் வடிவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தள்ளி வைத்த காரியம் தானாக முடிவுறும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை சிலர் அடைவீர்கள். புதிய நபர் வருகையால் அவசர காரியம் ஒன்றை செய்ய வேண்டியிருக்கலாம். சொந்தத் தொழிலில் உற்சாகம் இருக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பாராத போட்டிகள் உருவாகி, வியாபாரத்தை பாதிக்க நேரலாம். என்றாலும் சாமர்த்தியத்தால் அவைகளை வெற்றிகொள்வீர்கள். பங்குச் சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொண்டு வரக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கு பெற வெளியூர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள். சுபகாரியங்கள் நடைபெற முயற்சி மேற்கொள்வீர்கள். பெண்கள் மங்களகரமான பொருட்களை வாங்குவீர்கள்.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை அங்காரக பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மகிழ்வைத் தரும்.


Next Story