கன்னி - வார பலன்கள்
சிறந்த சிந்தனையோடு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!
வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எதிர்பாக்கலாம். சகப் பணியார்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சொந்தத் தொழிலில், ஒரு சிலர் முன்னேற்றமான பலனை அடைவார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னணி நிலையை எட்ட பெரிதும் முயற்சி செய்வார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் படிப்படியாக வளர்ச்சி நிலையைக் காண்பார்கள். வருமானமும் திருப்தியாகவே இருக்கும். அரசியல்வாதிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு பதவிகள் தேடி வரக்கூடும். குடும்பத்தில் பிரச்சினை எதுவும் எழாதவாறு, பெண்கள் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். என்றாலும் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.