கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 April 2023 1:35 AM IST (Updated: 7 April 2023 1:36 AM IST)
t-max-icont-min-icon

கம்பீரமான தோற்றம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

செய்யும் வேலைகளில் சிரமங்கள் இருந்தாலும், சிந்தனையோடு முயன்று முன்னேறுவீர்கள். விரயங்களைத் தவிர்க்க விழிப்புடன் செயலாற்ற வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருந்தால் பிரச்சினைகள் ஏற்படாது. விடுமுறையில் சென்றிருக்கும் சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அவசரப் பணியை முடித்துக் கொடுக்க நேரம் காலம் பாராமல் வேலை செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள், கடன் தொல்லைகள் போன்றவற்றை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று களிப்படைவர். எதிர்பார்க்கும் ஆதாயம் இல்லாவிட்டாலும் செய்யும் வேலையில் திருப்தி இருக்கும். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் வந்துசேரும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.


Next Story