கன்னி - வார பலன்கள்
அன்பும், கலைநயமும் நிறைந்த கன்னி ராசி அன்பர்களே!
செயல்கள் சிலவற்றில் அதிக முயற்சி செய்து வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட வரவுகள் தள்ளிப் போகலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். உயரதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், உதவியாளர்களின் ஒத்துழைப்புடன் முக்கிய பணிகளில் கவனம் செலுத்துவார்கள். புதிய நபரின் வருகை பயன்தருவதாக இருக்கும். குடும்பத்தில் உறவினர் வருகையினால் செலவுகள் அதிகமாகலாம். வேலைக்குப் போகும் பெண்களில் சிலர் செல்போன் அல்லது விலை உயர்ந்த பொருளின் மீது கவனம் இன்றி தொலைக்க நேரிடும். கலைஞர்களுக்கு தீவிர முயற்சியினால் புதிய ஒப்பந்தம் கிடைத்தாலும், எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது. பங்குச்சந்தை ஓரளவு லாபம் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு, துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.