கன்னி - வார பலன்கள்
கட்டளை இடும் திறமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
வெள்ளி முதல் சனிக்கிழமை காலை 6.17 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் நிதானம் அவசியம். தேவையற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லது. அரசியல்வாதிகள், முன்னேற்றமான பலன்களை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு வந்துசேரலாம். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக வேலைகளால் அவசரமாகப் பணிகளில் ஈடுபடுவார்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பணப் பொறுப்பில் உள்ளவர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை சமாளிப்பதில் பெண்கள் கவனமாய் இருப்பார்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களின் பணிகளில் மகிழ்வுடன் ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தை தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு, சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி வணங்குங்கள்.